அரசு பணம் கையாடல் புகார்; புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்: தென்காசி கலெக்டர் உத்தரவு

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த தொகையை முறையாக அரசு கணக்கில் செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
அரசு பணம் கையாடல் புகார்; புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்: தென்காசி கலெக்டர் உத்தரவு
Published on

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் ராஜேஷ் என்பவர் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்தார். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை முறையாக அரசு கணக்கில் செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் வரை ராஜேஷ் மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் குறித்துத் துறை ரீதியான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அரசுப் பணத்தைக் கையாடல் செய்தது மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, நிர்வாகத் திறக்குறைவு மற்றும் நிதி மோசடி புகாரில் சிக்கிய ஊராட்சி செயலாளர் ராஜேஷைப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை அப்பகுதி ஊராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com