அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில் இந்த பணிகளுக்கு மிக அதிக அளவில் மனுக்கள் பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளின் போது மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகளின் போது தொற்று பரவல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான நேர்காணல் உள்ளிட்ட தேர்வு பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com