தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு

நிர்வாக வசதிக்காக அவ்வப்போது அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

*நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம்

*எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமனம்

*திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்

*பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்; எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபாண்மையினர் நலத்துறை இயக்குநராக நியமனம்

*ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம்

X

Daily Thanthi
www.dailythanthi.com