அரசு பள்ளியில் காலை உணவு திட்டம்; கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்

பனவடலிசத்திரம் அருகே நடுவக்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்.
அரசு பள்ளியில் காலை உணவு திட்டம்; கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார்
Published on

பனவடலிசத்திரம்:

தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் ஒன்றியம் நடுவக்குறிச்சியில் அரசு தொடக்க பள்ளியில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கினார். தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மேலநீலிதநல்லூர் யூனியன் தலைவர் மாதவி, சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்திட்ட இயக்குனர் குருநாதன் வரவேற்றார்.

இதில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். இதில் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 81 மாணவர்கள் காலை உணவை உட்கொண்டனர். மேலநீலிநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலம்மாள், சிவக்குமார், வட்டார கல்வி அலுவலர் கவிதா, மேலநீலிதநல்லூர் யூனியன் துணை தலைவர் பாரதி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com