அரசு பள்ளி மாணவர்கள் பேரணி

தேவர்சோலை அருகே அரசு பள்ளி மாணவர்கள் பேரணி சென்றனர்.
அரசு பள்ளி மாணவர்கள் பேரணி
Published on

கூடலூர்

கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே மே பீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த பேரணிக்கு கூடலூர் வட்டார கல்வி அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரஷீது தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மாணவ-மாணவிகளின் காலை வழிபாட்டு நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், பலூன், அலங்கார பொருட்களை கொடுத்து மகிழ்வித்தனர். பேரணியில் மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தனர். புதிய கல்வியாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் பால் விக்டர், ஆசிரியர்கள் பாபு, குமார், ஜெசிக்கா மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com