மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு நடந்தது.
மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு
Published on

புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான ஸ்குவாஷ் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர்கள் தரணீஸ், லத்திகா, 9-ம் வகுப்பு மாணவர்கள் ஈஸ்வரமூர்த்தி, நாகஜோதி, மின்னல்கொடி, பாப்பாத்தி, 11-ம் வகுப்பு மாணவர்கள் காவியா, லாவண்யா, சங்கீதா, 12-ம் வகுப்பு மாணவர் சரவணன் ஆகியோர் மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றனர். இதையடுத்து அவர்கள் மாநில அளவிலான ஸ்குவாஷ் போட்டிக்கு தகுதி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் மருதைவீரன், உதவித் தலைமையாசிரியர் கார்த்திகேயன், உடற்கல்வி ஆசிரியை செல்வமணி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com