அரசுத்துறை டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுத்துறை டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
அரசுத்துறை டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி டிரைவர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். டிரைவர்களுக்கு கல்வி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும் சங்க நிர்வாகிகள்கூறும்போது, வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com