கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்

கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்
Published on

சென்னை,

தமிழக கவர்னர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். கவர்னருடன் அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர்.

கவர்னரின் பதவிக்காலம் ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், பதவி நீட்டிப்புக்கான உத்தரவு இதுவரை வரவில்லை. இதனால் டெல்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை ஆர்.என்.ரவி சந்தித்து பதவி நீட்டிப்பு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று டெல்லி சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி 21-ம் தேதி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com