அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு கல்லூரி விரிவுரையாளர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
Published on

பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் தற்காலிகமாக பணிபுரியும் கவுரவ, மணி நேர விரிவுரையாளர்கள் நேற்று 2-வது நாளாக தங்களது பணிகளை புறக்கணித்து 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும். 1.1.2020 முதல் உள்ள நிலுவை தொகையை வழங்க வேண்டும், அனைத்து விரிவுரையாளர்களுக்கும் சம ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். மணிநேர விரிவுரையாளர்கள் என்ற பெயரை கவுரவ விரிவுரையாளர் என மாற்றி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறைவேற்றித்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இரவிலும் போராட்டம் நீடித்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com