இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் உயிரிழந்த பால் வியாபாரி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
Published on

கோவை

கோவை ஒண்டிபுதூரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 48), பால் வியாபாரி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் சிவானந்தம் உயிரிழந்தார். இதனால் இழப்பீடு கேட்டு அவருடைய மனைவி காந்திமதி கோவை மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, காந்திமதிக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு தொகையை வழங்கவில்லை. இதனால் வட்டியுடன் சேர்த்து ரூ.23 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்பிறகும் அந்த தொகை யை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் இருந்தது. எனவே நிறைவேற்றுதல் மனுவை காந்திமதி அந்த கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் கோர்ட்டு ஊழியர்கள் கோவையில் இருந்து சேலத்துக்கு சென்ற அரசு பஸ்சை ஜப்தி செய்து கோவை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com