தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா

கூடலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது.
தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா
Published on

கூடலூரில் அரசினர் தோட்ட தொழிலாளர் குழந்தைகள் தொழிற் பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 2021-2023-ம் ஆண்டு படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு நிலைய முதல்வர் ஷாஜி ஜார்ஜ் தலைமை தாங்கினார். தொழிற் பயிற்சி நிலைய அறங்காவலர் கே.பி.முகமது மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மின்வாரியத்தில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் கனகராஜ், ராதாகிருஷ்ணன் ஹரிதாஸ், அந்தோனிதாஸ், மோகன், மூசா, வேலுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாக முதல்வர் தெரிவித்தார். முடிவில் ஆசிரியை அம்மினி நன்றி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com