இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர்

இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும்: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர்
Published on

சென்னை,

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை என புகார் எழுந்தது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 டிசம்பர் மாதம் பட்டமளிப்பு விழா நடைபெற்று இருந்தது. லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில், பட்டமளிப்பு விழா நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்து உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com