தூத்துக்குடியில் 26ம் தேதி கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 26-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் 26ம் தேதி கிராம சபைக் கூட்டம்: கலெக்டர் தகவல்
Published on

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் 26.1.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. மாவட்ட கலெக்டர் இளம்பகவத், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பசுவந்தனை கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். எனவே பொது மக்கள் அனைவரும் தங்கள் கிராமங்களில் நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com