சென்னையில் இஸ்கான் கோவில் ரத யாத்திரை கோலாகலம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ என கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
சென்னையில் இஸ்கான் கோவில் ரத யாத்திரை கோலாகலம் - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
Published on

சென்னை,

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோவில் சார்பில் ரத யாத்திரை விமரிசையாக நடைபெற்றது. ஜெகன்னாதர், பாலபத்திரர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்கள் சிறப்பு அலங்காரங்களோடு தீப ஆராதனை காட்டப்பட்டு ரதத்தில் எழுந்தருளினர். பாலவாக்கத்தில் இருந்து ரத யாத்திரை முறைப்படி துவங்கியது.

அங்கிருந்து புறப்பட்ட ரதம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்து அக்கரையில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலை வந்தடைந்தது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலதாளங்கள் முழங்க, ‘ஹரே கிருஷ்ணா ஹரே ராமா’ என கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் நடனமாடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com