சென்னை கொரட்டூரில் விமரிசையாக நடந்த அம்மன் கோவில் பால்குட ஊர்வலம் - 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்றனர்.
சென்னை கொரட்டூரில் விமரிசையாக நடந்த அம்மன் கோவில் பால்குட ஊர்வலம் - 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு
Published on

சென்னை,

சென்னை அடுத்த கொரட்டூரில் உள்ள பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில் ஆடி மாதத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், அம்மனின் தாய் வீடான கொரட்டூர் கருமாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பால்குடம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக சென்றனர். "ஓம் சக்தி பராசக்தி" முழக்கத்துடன் கொரட்டூர் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் பெண்கள் பால்குடம் ஏந்தி அணிவகுத்துச் சென்றனர். சுமார் 4 கிலோமீட்டர் சுற்றி வந்த பால்குட ஊர்வலம், பாடலாத்திரி சீயாத்தம்மன் கோவிலில் நிறைவடைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com