தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க பசுமைக்குழு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

தமிழகம் முழுவதும் மரங்களை பாதுக்காக நிபுணர்கள் அடங்கிய மாநில பசுமைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மரங்களை பாதுகாக்க பசுமைக்குழு - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி, ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ராஜா மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட குழுக்களைப் போல, மரங்களை பாதுகாப்பதற்காக மாநில அளவிலான பசுமைக் குழுவில் இரு நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பான அரசாணையை அரசு தரப்பு வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com