குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ? - டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோவு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது ? - டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ அறிவிப்பு
Published on

சென்னை, 

நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டன.

கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தேவை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோ எழுதியுள்ளனா. குரூப் 2 தேவுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணிகளைத் தொடங்க சிறிது தாமதமானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com