கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் சேவை ரத்து

சென்னை சென்ட்ரல் - பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி புறநகர் ரெயில் சேவை ரத்து
Published on

தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் நாளை காலை 9.50 முதல் - மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் பயணிகளுக்காக குறைந்த அளவில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com