அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

குட்கா முறைகேடு வழக்கு, எம்பி - எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்
Published on

சென்னை,

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக புகாரில் சிபிஐ காவல்துறை வழக்கை விசாரித்து வருகின்றது.

இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா முன்னாள், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் எதிராக கூடுதல் குற்றபத்திரிகை கடந்த மே மாதம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஏழில் வளவன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு

அப்போது வழக்கில் முன்னாள் மற்றும் இன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் வழக்கு விசாரணை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், விசாரணையை ஆகஸ்ட் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com