குட்ஷெட் லாரி டிரைவர் தவறி விழுந்து பலி

குட்ஷெட் லாரி டிரைவர் தவறி விழுந்து பலியானார்.
குட்ஷெட் லாரி டிரைவர் தவறி விழுந்து பலி
Published on

தஞ்சை மாவட்டம் கல்லணை கோவிலடியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 49). இவர் திருச்சி குட்ஷெட்டில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று இவர் குட்ஷெட் பாலம் அருகே நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அவரது மனைவி மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com