தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

ஆற்காடு அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

வேலூர் சேண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தஸ்தகீர் (வயது 40), வேலூரில் உள்ள பழக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி ரிஸ்வானா. இவர்கள் ஆற்காட்டில் உள்ள வேலூர் மெயின் ரோடு பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். தஸ்தகீருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் படுக்கையறைக்கு சென்ற தஸ்தகீர் வெளியில் வரவில்லை. அவரது மனைவி சென்று பார்த்தபோது தஸ்தகீர் தூக்குப்போட்டுக் கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com