நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1951-ல் நடைபெற்ற முதல் நாடாளுமன்ற தேர்தலில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 489 ஆக இருந்தது. அதன்பின்னர் 1951-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதிகளின் எண்ணிக்கை 1952-ம் ஆண்டு 494 ஆகவும், 1963-ல் 522 ஆகவும், 1973-ல் 543 ஆகவும் உயர்த்தப்பட்டது.
பின்னர், இந்த எண்ணிக்கை 2001-ம் ஆண்டு வரை நீடிக்கும் என்று 1976-ல் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. 2001-ம் ஆண்டு தென்மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், மக்களவை இடங்களின் எண்ணிக்கையை மாற்றும் பணியை 2026 வரை தள்ளி வைத்தார்.
இதற்கிடையில், மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. இருப்பினும், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்து, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பின்னரே இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என்று அந்த சட்டம் கூறுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்திருக்கவேண்டிய கணக்கெடுப்பு தள்ளிப்போயுள்ளதால், 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. ஆனால் இதனை அந்த தேர்தலிலேயே நடைமுறைப்படுத்த மத்திய அரசு, சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத நாடாளுமன்ற தொகுதிகள் உயரும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்பட கூறியுள்ளார். அதன்படி பார்த்தால், தற்போது இருக்கும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543-ல் இருந்து 815 ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினால், 269 எண்ணிக்கையில் பெண்களுக்கான தொகுதிகள் இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 தொகுதிகள், இனி 58 தொகுதிகளாக உயரும். அதில் பெண்களுக்கு 33 சதவீதம் என்பதால், 19 தமிழக பெண்கள் எம்.பி.க்களாக தேர்வாகி நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப்போகிறார்கள். புதிய சட்டத்தின்படி பெண்களின் தொகுதிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் மாறிக்கொண்டே இருக்கும்.

இந்த மசோதா மூலம் பெண்களுக்கான இடஒதுக்கீடு கிடைப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும், தொகுதிகளின் எண்ணிக்கையில் தமிழகம் உள்பட தென்மாநிலங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. சரிசமமாக, 50 சதவீதம் உயர்வு என்பது மேலோட்டமாக பெரிதாக தெரிந்தாலும் தமிழ்நாட்டிற்கு ஆபத்து மறைந்து இருக்கிறது. அது எப்படியென்றால் தற்போது உத்தரபிரதேசத்திற்கு இருக்கும் எம்.பி.க்கள் எண்ணிக்கை 80, தமிழ்நாட்டிற்கு 39. நமக்கும், அவர்களுக்குமான இடைவெளி வெறும் 41.
ஆனால் 50 சதவீத உயர்வால் இனி உத்தரபிரதேசத்திற்கு 120 எம்.பி.க்களும், தமிழகத்திற்கு 58 எம்.பி.க்களும் இருப்பார்கள். அதனால் இருமாநிலங்களுக்கான இடைவெளி முன்பிருந்த 41 என்பது இனி 62 ஆகிறது. இந்த வித்தியாசம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதோடு, மத்திய அரசின் நிதி பெறுவதிலும் பெரிய பாகுபாட்டினை ஏற்படுத்தும். எனவேதான் இந்த விவகாரத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தை அறிவித்துள்ளார்.