

சென்னை,
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு, எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்-அமைச்சர் என். ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய பாராளுமன்ற விவகாரத் துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அவரது பொதுவாழ்க்கைப் பணி மேலும் சிறக்கவும், அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.