தமிழக சகோதர, சகோதரிகளுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழக சகோதர, சகோதரிகளுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை,

ஆங்கில வருடப்பிறப்பு இன்று நள்ளிரவு தொடங்க உள்ளது. ஆங்கிலப்புத்தாண்டுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில்,

தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம், வெற்றியை கொண்டு வரட்டும். இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com