உலக தந்தையர் தினம் - டிடிவி தினகரன் வாழ்த்து

குழந்தைகளின் கனவுகளை நனைவாக்குவதற்காக எண்ணற்ற தியாகங்களை சத்தமின்றி தந்தையர்கள் செய்துவருகின்றனர்.
 டிடிவி தினகரன்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஒட்டுமொத்த குடும்பத்தை தாங்கி சுமக்கும் அடிப்படை தூணாகவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் சமூக பொறுப்புணர்வை கற்றுத்தரும் முதல் ஆசானாகவும் விளங்கும் தந்தையர்கள் அனைவருக்கும் உலக தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அர்ப்பணிப்பு உணர்வு

தங்களது சொந்த விருப்பங்களை விட குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது உழைத்து, குழந்தைகளின் கனவுகளை நனைவாக்குவதற்காக எண்ணற்ற தியாகங்களை சத்தமின்றி செய்துவரும் தந்தையர்களின் அர்ப்பணிப்பு உணர்வையும், அளப்பரிய உழைப்பையும் இந்நாளில் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com