அனைவருக்கும் இனிய சென்னை தின நல்வாழ்த்துகள் - அண்ணாமலை

சென்னை மாநகரில் வசிக்கும் அனைவருக்கும், இனிய சென்னை தின நல்வாழ்த்துகளை அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
Published on

சென்னை,

சென்னை மாநகரம் இன்று (ஆகஸ்டு 22) தனது 387-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த நிலையில், வருங்கால தலைமுறைக்கு பசுமையான சென்னையை பரிசளிப்போம் என 'வி த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை சென்னை தினத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

சென்னை தின நல்வாழ்த்துகள்

வரலாற்றையும், பாரம்பரியத்தையும், நவீனத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும் சென்னை மாநகரில் வசிக்கும் அனைவருக்கும், இனிய சென்னை தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும் அரவணைப்பும், கலையும், கல்வியும், அனைவரின் பங்களிப்பும் இணைந்து உருவாக்கிய நமது சென்னை மாநகரம், நம்பி வந்தவர்களை தன்னுடையவர்களாக ஏற்றுக் கொள்ளும் தனிச்சிறப்பு கொண்டது. சென்னை என்பது ஒரு பெயர் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு.

பசுமையை மீட்டெடுப்போம்

ஆனால் நாளுக்கு நாள் குறைந்து வரும் பசுமையும், அதிகரித்து வரும் வெப்பமும் சென்னையின் எதிர்காலம் குறித்து நம்மை சிந்திக்க வைக்கிறது. இந்த சென்னை தினத்தில், ஒவ்வொரு சென்னை மக்களும் ஒரு உறுதி எடுத்துக்கொள்வோம். முடிந்தவரை பல மரங்களை வளர்ப்போம். நம் தெருக்கள், வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் என ஒவ்வொரு இடத்திலும் பசுமையை மீட்டெடுப்போம். வருங்கால தலைமுறைக்கு பசுமையான சென்னையை பரிசளிப்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com