அரசுப்பணிகளை விற்று திமுக அரசு கல்லா கட்டிவிட்டதா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

மாதக்கணக்கில் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு மாணவர்களை வஞ்சிக்கிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கூட்டுறவுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக SRB மற்றும் DRB தேர்வுகள் நடத்தப்பட்டு 100 நாட்களாகிவிட்டன. உதவிப் பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் TRB தேர்வு நடத்தப்பட்டு 60 நாட்களாகிவிட்டன. ஆனால், இவ்விரண்டு தேர்வுகளுக்கான முடிவுகளை இன்றுவரை வெளியிடாமல், இளைஞர்கள் எதிர்காலத்தோடு விளையாடி வருகிறது திமுக அரசு.

Also Read
கர்ப்பிணி மனைவி, 3 மகள்களை கழுத்தை அறுத்து கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

கொடுத்த வாக்குறுதிப்படி அரசுத் துறைகளில் 5.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பும் திறன்தான் திமுக அரசிடம் இல்லையென்றால், உடனுக்குடனேயே தேர்வு முடிவுகளை வெளியிடும் திறன்கூட இல்லையா? அல்லது தேர்வு முடிவுகளை வெளியிடாமலேயே, அரசுப்பணிகளை விற்று திமுக அரசு கல்லா கட்டிவிட்டதா?

Also Read
வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
கோப்புப்படம்

மாதக்கணக்கில் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் மாணவர்களை வஞ்சிக்கும் மெத்தன திமுக அரசுக்கு, மாதந்தோறும் ஒரு வெற்றுப் பெருமை விழா நடத்துவது ஒன்றுதான் கேடு! கல்விக் கடனையும் ரத்து செய்யாமல் வேலைவாய்ப்பைபும் வழங்காமல் தவிக்கவிடும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் முடிவு கட்டுவர் தமிழக இளைஞர்கள்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read
அனுமதியின்றி ஊடக விவாதங்களில் பங்கேற்கக் கூடாது - தவெகவினருக்கு என்.ஆனந்த் அறிவுறுத்தல்
கோப்புப்படம்
X

Daily Thanthi
www.dailythanthi.com