ரேகா குப்தாவின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்: வானதி சீனிவாசன்

ரேகா குப்தா தெரிவித்த நல்வாழ்த்துகளுக்கும், செய்த பிரார்த்தனைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ரேகா குப்தாவின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்: வானதி சீனிவாசன்
Published on

கோயம்புத்தூர்,

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தற்போது கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரசாரத்தின்போது திடீரென அவருக்கு கால் வலி ஏற்பட்டது.

அதன் பின்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் காரணமாக திடீரென அலர்ஜி ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

டெல்லியின் முதல்-மந்திரி திருமதி. ரேகா குப்தா, இன்று என்னை சந்தித்து எனது உடல்நலம் குறித்து விசாரித்தார். நான் விரைவில் குணமடைய அவர் தெரிவித்த நல்வாழ்த்துகளுக்கும், செய்த பிரார்த்தனைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தல் பிரச்சார பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி கோவைக்கு வருகை தந்தமைக்கும், அவர் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்கும் நான் அவருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com