தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நாளை மற்றும் நாளை மறுதினம் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் 12 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம குன்னூரில் 9 செ.மீ., தேனி மாவட்டம் கூடலூர், மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com