கனமழை எச்சரிக்கை: சென்னை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!

கனமழை எச்சரிக்கை காரணமாக வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: சென்னை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!
Published on

சென்னை,

வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வருவதால் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை (11.11.2022) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, வேலூர் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com