கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Published on

சென்னை,

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 நேரத்தில் சற்றே வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி 10-12-ம் தேதிகளில் நகரக்கூடும்.

இதன் காரணமாக 11-ம் தேதி (நாளை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (11.11.2022) ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com