தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதால் இன்று 5 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதன் காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைவதால் இன்று 5 மாவட்டங்களில் கனமழை - வானிலை மையம் தகவல்
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து வருவதால் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல், ஈரோடு, நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இது தவிர பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் இன்று பலத்த காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்களில் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com