நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி... பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 105 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பவானிசாகர் அணை
Published on: 

பவானிசாகர்,

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 3 நாட்களில் 3 அடி உயர்ந்து 60 அடியை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணைக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி, அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 4,827 கனஅடியாக உயர்ந்துள்ளது.

குடிநீர் தேவைக்காக வெளியேற்றம்

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 105 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயப் பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com