தமிழகத்தின் பல பகுதிகளில் கோடையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை

கிருஷ்ணகிரி, தர்ம‌புரி, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் கோடையில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை
Published on

சென்னை,

தென்தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில், கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் 4 சென்டிமீட்டர் மழையும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி மற்றும் பெனுகொண்டபுரம், தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், தென்காசியில் சிவகிரி, தேனியில் சோத்துப்பாறை ஆகிய இடங்களில் தலா 3 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

இதேபோன்று வேலூர், திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் ஒரு சென்டிமீட்டர் முதல் 2 சென்டிமீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com