2-ம் நிலை போலீஸ்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்

2-ம் நிலை போலீஸ்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
2-ம் நிலை போலீஸ்காரர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க உதவி மையம்
Published on

அரியலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2-ம் நிலை போலீஸ்காரர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆகிய பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பது குறித்த உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களுக்கு https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இயங்கிவரும் உதவி மையத்தை நேரில் அணுகியோ அல்லது 7305984100 என்ற செல்போன் எண்ணையோ தொடர்பு கொண்டோ விளக்கம் பெறலாம். இந்த உதவி மையம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும், என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com