பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்

பாலியல் சீண்டல் விவகாரத்தில் பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசத்திற்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பூந்தமல்லி தவெக வேட்பாளருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது ஐகோர்ட்
Published on

திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் பிரகாசம் என்கிற குட்டி. தவெக வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட போது பிரகாசம் என்கிற குட்டி பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் என்கிற குட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது மகளிர் அணி நிர்வாகி ஒருவரை பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து த.வெ.க தலைமைக்கு அந்த பெண் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வருகை தந்து பாலியல் சீண்டல் அளித்த தவெக வேட்பாளர் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருந்தார். அவர் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் குட்டி என்ற பிரகாசம் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், தனக்கு முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் தவெக வேட்பாளர் பிரகாசம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாஅரித்த சென்னை ஐகோர்ட்டு, பிரகாசத்திற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com