ஊட்டி, கொடைக்கானல் விடுதிகளுக்கு ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு

ஊட்டி, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என்று கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல் விடுதிகளுக்கு ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
Published on

சென்னை,

ஊட்டி, கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகின்றனவா? என ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அதிகாரி, நகராட்சி ஆணையர், மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி அடங்கிய குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் உரிமம் இல்லாத விடுதிகளை மூட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தங்கும் விடுதிகள் அதிக கட்டணங்கள் வசூலிக்கன்றனவா என்பது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகள் குறித்து புகார் தெரிவிக்க பிரத்யேக தொலைபேசி எண், இணையதள வசதியை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com