தென்காசியில் ரூ.32½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள்

தென்காசியில் ரூ.32½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது.
தென்காசியில் ரூ.32½ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்குகள்
Published on

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.32 லட்சம் செலவில் மினி உயர்கோபுர மின்விளக்குகள் தென்காசியில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, களக்கோடி தெரு, உப மின்நிலையம் பகுதி, அணைக்கரை தெரு, வாய்க்கால் பாலம், மவுண்ட் ரோடு, நடுபேட்டை தெரு, தெப்பக்குளம் பகுதி ஆகிய 9 இடங்களில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை தனுஷ்குமார் எம்.பி. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com