தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்
Published on

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார். தமிழக கவர்னர் மாளிகை சென்னை கிண்டியில் உள்ளது.

இந்நிலையில், கவர்னர் மாளிகைக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் கவர்னர் மாளிகையில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் திவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com