கான்பூர் - மதுரை இடையே சிறப்பு ரெயில் - கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கம்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (27-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
கான்பூர் - மதுரை இடையே சிறப்பு ரெயில் - கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கம்
Published on

சென்னை,

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிறப்பு ரெயில்

கான்பூர் சென்டிரலில் இருந்து ஜூலை 1, 8, 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில், புதன்கிழமைதோறும் காலை 8.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 01925) 3-வது நாள் காலை 7.15 மணிக்கு மதுரையை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், மதுரையில் இருந்து ஜூலை 4, 11, 18, 25 மற்றும் ஆகஸ்டு 1 ஆகிய தேதிகளில், சனிக்கிழமை தோறும் அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01926) 3-வது நாள் காலை 4.30 மணிக்கு கான்பூர் சென்டிரலை சென்றடைகிறது.

முன்பதிவு நாளை தொடக்கம்

22 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (27-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com