விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கோப்புப்படம்
திருவண்ணாமலையில் 5 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை தினம் மற்றும் பவுர்ணமி போன்ற விசேஷ தினங்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கடந்த சில தினங்களாக இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று விடுமுறை நாளையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட் டம் அலைமோதியது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பலர் திருவண்ணாமலையில் தனித் தனியாக கிரிவலம் சென்றபடி காணப்பட்டனர்.






