விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

விழுப்புரம்,

பெஞ்ஜல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. கடந்த 30, 1-ந் தேதி என 2 நாட்கள் தொடர்ந்து இடைவிடாது பெய்த கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததுபோல் சில இடங்களில் பள்ளிகளையும், கல்லூரிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மழை பாதிப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார். மேலும் திங்கள்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com