

தென்காசி,
தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய தினங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.