வீடு புகுந்து 2 செல்போன்கள் திருட்டு

வீடு புகுந்து 2 செல்போன்கள் திருட்டு போனது.
வீடு புகுந்து 2 செல்போன்கள் திருட்டு
Published on

ஈரோடு வீரப்பன்சத்திரம் பாண்டியன் வீதியைச் சேர்ந்தவர் குமார் (வயது 67). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை சாத்திவிட்டு தூங்கியுள்ளார்.இந்த நிலையில் நேற்று காலை எழுந்துபார்த்தபோது வீட்டில் இருந்த 2 செல்போன்களை காணவில்லை. அதை இரவில் வீடு புகுந்து மர்மநபர் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து இதுபற்றி குமார் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com