ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
Published on

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி 45 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமை தாங்கினார். விழாவில் திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவிச்சரக கோட்ட தளபதி ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பயிற்சி முடித்த ஊர்க்காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கோபிநாத், ஊர்க்காவல் படை கோட்டத்தளபதி ராஜேந்திரன், ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை இசைக் குழுவினர், ஊர்க்காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஊர்க்காவல் படை மண்டலத் தளபதி அழகுமணியன் வரவேற்று பேசினார். முடிவில் ஊர்க்காவல் படை உதவி ஆய்வாளர் கவிதா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com