பள்ளி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை

சிங்காரப்பேட்டை அருகே பள்ளி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை
Published on

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை அருகே கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவன் பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். மாணவன் வழக்கமாக தான் செல்லும் பஸ் தவற விட்டதால் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மாணவனை மிரட்டி மறைவான இடத்திற்கு தூக்கி சென்று ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவன் கூச்சலிட்டுள்ளான். மேலும் மாணவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த நபர்கள் 2 பேரும் மாணவனை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். மாணவனின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் ஊத்தங்கரை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, 2 மர்ம நபர்கள் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com