தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்

அரசுக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 8000-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிலைப்படுத்தல், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் திமுக அரசு அதனை நிறைவேற்ற மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

Also Read
மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கொத்தனார் கைது
கோப்புப்படம்

அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் எனப் பெயரளவில் கூறப்பட்டாலும் தற்காலிகப் பணியாளர்கள் என்பதால் மிகவும் இழிவான நிலையிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். தங்களது கல்வித்தகுதிக்கேற்ற ஊதியம் கிடைக்காவிட்டாலும், என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் எனும் பெரும் நம்பிக்கையிலேயே அவர்கள் சொற்ப ஊதியத்திற்கு இப்போதுவரை பணியாற்றி வருகின்றனர். அதுவும் மே மாதம் விடுத்து, 11 மாதங்களுக்கே அவர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், துறைத்தலைவர்கள் இல்லாத பல கல்லூரிகளில் இவர்கள்தான் தூணாக நின்று தாங்கிப் பிடித்து, லட்சக்கணக்கானப் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றனர்.

Also Read
ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
கோப்புப்படம்

பல்கலைக்கழக மானியக்குழு கவுரவ விரிவுரையாளர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. அதனை சென்னை, ஐகோர்ட்டு தீர்ப்பும் உறுதிசெய்திருக்கிறது. இருந்தும், அம்முடிவு இன்னும் செயலாக்கம் செய்யப்படவில்லை. ‘கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்பது முதுமொழி. ஆனால், இங்கு கற்பிக்கும் ஆசிரியப்பெருந்தகைகளுக்கே மதிப்பில்லை என்பதுதான் புறச்சூழலாகும். பல ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் கோரிப் போராடி வரும் இவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு செய்யப்படாது, தற்காலிகப்பணி என்பதுதான் நிரந்தரமாக ஆக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அறிவுக்கருவறையாகத் திகழ்பவைக் கல்விக்கூடங்கள். அதனையுணர்ந்தே, மேலை நாடுகளில் ஆசிரியர்களைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள். ஆனால், இங்கு ஆசிரியப் பெருமக்களே தங்களது வாழ்வாதாரத்துக்காகப் போராட வேண்டிய மோசமான நிலையிருப்பது வெட்கக்கேடானதாகும்.

Also Read
சென்னையில் நாளை மறுநாள் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்
கோப்புப்படம்

ஆகவே, அரசுக் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்து, பல்கலைக்கழக மானியக்குழு தீர்மானித்த 57,500 ரூபாய் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், முழுமையாக 12 மாத ஊதியமும், முறையான வருங்கால வைப்பு நிதியும், பணிக்கொடையாக 25 லட்சமும், விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

கவுரவ விரிவுரையாளர் பெருந்தகைகள் தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி முன்னெடுக்கும் தொடர் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிப்பதோடு கோரிக்கைகள் வெல்ல உறுதியாக துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com