ஒசூர்: வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் - 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் மக்கள்

ஒசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருகால் தரைப்பாலம் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஒசூர்: வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம் - 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் மக்கள்
Published on

ஒசூர்,

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஒசூரின் கெலவரப்பள்ளி நீர் தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கெலவரப்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், பாதுகாப்பு நலன் கருதி தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தரைபாலம் மூழ்கடிக்கப்பட்டது.

தரைப்பாலம் மூழ்கியதால் தட்டிகானபள்ளி, சித்தனபள்ளி, நந்திமங்கலம் கிராமங்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.        

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com