ஓசூர் : தனியார் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை

ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
ஓசூர் : தனியார் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை
Published on

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த தனியார் நிறுவனத்தில் இன்று காலை துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

தனியார் நிறுவனத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், மேலாளர் உட்பட 4 பேரை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 5 பேர் ஈடுபட்டதாக தனியார் நிறுவனத்தின் மேலாளர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தனியார் நிறுவனத்தின் சிசிடிவி கேமராக்களையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஓசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இன்று காலையில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com