விஎஸ் பாபு உடல் நிலை எப்படி உள்ளது? சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பதில்

விஎஸ் பாபுவிடம் இரண்டு முறை தொலைபேசியில் பேசியதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறினார்.
விஎஸ் பாபு
விஎஸ் பாபு
Published on: 

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு. இவருக்கு கடந்த மாதம் 9ம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஎஸ் பாபு உடல்நிலை பற்றி கடந்த மாதம் 22 ஆம் தேதி தனியார் மருத்துவமனை அறிக்கை அளித்தது.

அதன்பிறகு தற்போது வரை எந்த ஒரு அறிக்கையும் அளிக்கவில்லை. விஎஸ் பாபு உடல் நிலை குறித்த விவரங்களை அரசு வெளிப்படையாக பகிர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டனர்

அதற்கு சபாநாயகர் அளித்த பதில் வருமாறு: வி.எஸ்.பாபுவிடம் தொலைபேசியில் இருமுறை பேசினேன். அவர் தற்போது நலமடைந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பாக உணவுத்துறை அமைச்சர் அவரைச் சந்தித்தபோது, அவர் உற்சாகமாக இருப்பதாகத் தெரிவித்தார். விஎஸ் பாபு நன்றாக இருக்கிறார். கவலைப்பட தேவையில்லை”என்றார்.

அருண் ராஜ் விளக்கம்

நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்ஜிடம் விஎஸ்பாபு உடல் நிலை பற்றி மருத்துவர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அருண் ராஜ், விஎஸ் பாபு தீவிர சிகிச்சை பிரிவில்தான் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஒவ்வொரு நாளும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. விரைவில் வீடு திரும்புவார்” என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com